search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐதராபாத் ஐகோர்ட்"

    ராம்கோபால் வர்மா படத்தில் சந்திரபாபு நாயுடுவை அவமதிக்கும் பாடலை நீக்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டில் எம்எல்ஏ பிட்டாபுரம் தொகுதி எம்எல்ஏ வழக்கு தொடர்ந்துள்ளார். #ChandrababuNaidu #Ramgopalvarma
    நகரி:

    மறைந்த ஆந்திர முதல்-மந்திரியும், பிரபல நடிகருமான என்.டி.ராமராவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் ராம் கோபால் வர்மா “லட்சுமீஸ் என்.டி.ஆர்.” என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறார்.

    இப்படத்தில் தகா தகா (மோசடி... மோசடி) என்ற பாடல் வெளியிடப்பட்டது. பாடல் காட்சியில் தகா என்னும் வார்த்தை வரும்போது ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை காட்டி உள்ளனர்.

    இது சந்திரபாபு நாயுடுவை அவமதிப்பதாக உள்ளதாகவும் இப்பாடல் காட்சியை நீக்கிவிட வேண்டும் என்று கூறி ஐதராபாத் ஐகோர்ட்டில் பிட்டாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வர்மா மனுதாக்கல் செய்தார்.

    அதில் இந்த பாடல் காட்சியை யூ-டியூப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்கி விடும்படி சென்சார் போர்டுக்கு உத்தரவிடும்படி மனுவில் கேட்டுக் கொண்டார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், ராஜசேகர ரெட்டி, மத்திய, மாநில சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

    மனுதாரரின் கோரிக்கை மற்றும் இது சம்பந்தப்பட்ட முழு விவரங்களையும் தங்கள் முன் வைக்கும்படி நீதிமன்றம் நோட்டீசில் உத்தரவிட்டது. அடுத்த கட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

    இப்படத்தில் என்.டி.ராமராவின் 2-வது மனைவி லட்சுமி பார்வதி கதையை வைத்து இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ChandrababuNaidu #Ramgopalvarma
    ×